நான் 11 ஆவது பேட்ஸ்மேன் என்னால சிக்ஸ் அடிக்க முடியாதுனு தோனி சொன்னாரு. ஆனா அடுத்த பாலே சிக்ஸ் அடிச்சேன் – டெல்லி வீரர் பகிர்வு

Ishanth
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் முடிந்த பின்னரே இயல்பு நிலைமைக்கு வரும் அவ்வாறு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் அல்லது விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஓய்வு நேரத்தை சமூக வலைதளங்களில் தங்களது ரசிகர்கள் உடன் உரையாடுதல் மற்றும் அவர்களது அனுபவங்களை பகிர்தல் போன்றவற்றை செய்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

- Advertisement -

இதில் சில முக்கிய வீரர்கள் ரசிகர்களுடன் நேரடியாக தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளம் மூலம் தொலைக்காட்சிக்கும் பேட்டி அளித்து வருகின்றனர். அதன்படி தற்போது சில வீரர்கள் சமூக வலைதளம் மூலமாக தொலைக்காட்சி பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பேட்டி ஒன்றினை அளித்தார்.

அதில் தோனி குறித்து சில முக்கிய தருணங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதன்படி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான நடந்த போட்டி பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டியில் தோனியை இஷாந்த் சர்மா தனது பேட்டிங்கின் மூலம் வெறுப்பேத்தியதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கெதிராக நடந்த அந்த சம்பவத்தைப் பற்றி இஷாந்த் சர்மா கூறுகையில் : நான் அப்பொழுது கடைசி வீரராக பேட்டிங் செய்ய வந்தேன். கடைசி ஓவரை ஜடேஜா வீசிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டம்புக்கு பின்னால் இருந்த தோனி உன்னால் சிக்சர் அடிக்க முடியாது உனக்கு அந்த அந்த அளவுக்கெல்லாம் திறமை இல்லை என கிண்டல் அடித்தார். இதனால் நான் அடுத்து அவரது பந்தினை அடிக்க தீர்மானித்தேன்.

அப்போது ஜடேஜா வீசிய பந்து முதல் பந்தை 4 ரன்களுக்கு விரட்டினேன். அதற்கு அடுத்த பந்தை சிக்ஸரும் அடித்தேன். அப்போது தோனியின் முகத்தை சற்று திரும்பிப் பார்த்தேன். அவர் மிகவும் கோபத்துடன் ஜடேஜாவை திட்டிக்கொண்டிருந்தார் என்று இசாந்த் சர்மா கூறியுள்ளார். அந்த போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் நான் சிக்சர் அடித்த அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாத நிகழ்வு என்றும் இஷாந்த் சர்மா குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement