IND : உலகக்கோப்பை இந்திய அணியில் இணைய உள்ள மற்றொரு நட்சத்திர வீரர் – இவர்தான்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Ishanth
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் இந்திய அணியில் வீரர்களுக்கு காயம் ஏற்படும் நிலையில் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களான ரிசர்வ் வீரர்களை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக களமிறங்க இந்திய அணியின் சீனியர் வீரரான இஷாந்த் சர்மாவை அணியில் சேர்த்துள்ளது.

எனவே, தற்போது உலகக்கோப்பை இந்திய அணியில் இஷாந்த் சர்மா அதிகாரபூர்வமாக இணைந்துள்ளதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.இஷாந்த் சர்மாவின் அனுபவம் நிச்சயம் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்பதால் அவரை அணியில் சேர்த்துள்ளோம் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறினார்.

Advertisement