இந்திய டெஸ்ட் அணியில் இணைய இருக்கும் மூத்த வீரர். ரசிகர்கள் மகிழ்ச்சி – விவரம் இதோ

Ishanth-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21ம் தேதி வெலிங்டனில் துவங்க உள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி ஒரு பயிற்சி போட்டியிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ind 1

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெறுவதற்கான தகுதி உடல் பரிசோதனையை தேர்வை இந்திய அணியின் சீனியர் வீரரான இஷாந்த் சர்மா பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகடமியில் 15ஆம் தேதி செய்ய உள்ளார். அந்த உடற் தகுதி தேர்வில் அவர் தனது உடல் தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் 21ம் தேதி நடக்கும் முதல் போட்டிக்காக அவர் நியூஸிலாந்து பறக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியின்போது விளையாடிய இசாந்த் சர்மா காலில் காயம் ஏற்பட்டு இவ்வளவு நாட்கள் சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெங்களூருக்கு சென்று தற்போது பயிற்சியை மேற்கொண்டு வரும் இஷாந்த் சர்மா 15ஆம் தேதி தனது உடல் தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் விரைவாக நியூசிலாந்து சென்று அந்த தொடரில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

Ishanth

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இஷாந்த் சர்மா குறித்த இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement