நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் மூத்த வீரர் இடம்பெறுவது சந்தேகம். இவருக்கும் காயமா ? – ரசிகர்கள் அதிர்ச்சி

Ind-1
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற நிலையில் கைப்பற்றி அசத்தியது. அதன் பின்னர் பெங்களூர் போட்டி முடிந்த பிறகு இன்று இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொள்ள உள்ளது.

Ind vs Aus

- Advertisement -

நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடருக்கான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா இடம்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ரஞ்சி கோப்பை தொடரின் டெல்லி – விதர்பா அணி மோதிய போட்டியில் பந்துவீசிய போது இஷாந்த் சர்மா கணுக்காலில் காயமடைந்து வெளியேறினார்.

Ishanth

மேலும் அவரது காயத்தின் தன்மை கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் இஷாந்த் சர்மா இடம்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 31 வயதாகும் இஷாந்த் சர்மா 96 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement