100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இஷாந்த் சர்மாவிற்கு ஜனாதிபதி கையால் கிடைத்த பரிசு – விவரம் இதோ

Ishanth

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி பகல்-இரவு டெஸ்ட்-ஆக சமீபத்தில் நடந்து முடிந்தது.இதில் இந்தியா பத்து விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்பொழுது உலகிலேயே மிகப்பெரிய மைதானம் இதுவே ஆகும். 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் டூப்ரோ நிறுவனம் இந்த அரங்கத்தை கட்டி முடித்துள்ளது.

cup

பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். தற்போது கொரோனா தொற்றால் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே 55 ஆயிரம் ரசிகர்கள் மட்டும் போட்டியை காண வந்து இருந்தனர்.

இந்த மைதானத்தை திறந்து வைக்க இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்து இருந்தார் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வந்து இருந்தார். இந்த போட்டி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். கேப்டன் விராட் கோலி தனது அணி வீரர்களை ஜனாதிபதியிடமும் உள்துறை அமைச்சிரடமும் அறிமுகம் செய்து வைத்தார்.

Ishanth

அப்போது ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இஷாந்த் ஷர்மாவிற்கு 100 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் தொப்பியும் சில நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். இதே போல இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டும் இங்கிலாந்து அணி வீரர்களை இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

- Advertisement -

ishanth 1

இஷாந்த் சர்மாவுக்கு தனது 100-வது போட்டியில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் இருந்து நினைவுப் பரிசை பெற்றது மிகப்பெரிய பாக்கியமாகும்.மேலும் இந்த மைதானத்தில் முதல் விக்கெட்டையும் எடுத்து அசத்தினார் இஷாந்த் சர்மா.