அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான சாதனை பட்டியலில் இணைந்த இஷாந்த் சர்மா – விவரம் இதோ

Ishanth
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Burns

இந்நிலையில் இந்த போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மூலம் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை குவித்து இருந்தனர்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 555 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களாகவே பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க சிரமப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் நாளான இன்று இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது.

ishanth 2

நாளைய போட்டியில் இங்கிலாந்து அணி விரைவில் ஆட்டமிழந்து இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன்மூலம் இஷாந்த் சர்மா இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

- Advertisement -

ishanth 1

உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களின் விவரம் இதோ :

கபில் தேவ் – 219

- Advertisement -

ஜவகல் ஸ்ரீநாத் – 108

ஜாஹீர் கான் – 104

இஷாந்த் சர்மா – 100

உமேஷ் யாதவ் – 96

Advertisement