அயல்நாட்டு மைதானத்தில் ஜாஹீர் கானின் சாதனையை முறியடித்த இஷாந்த் சர்மா – சாதனை விவரம் இதோ

Ishanth

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் நியூசிலாந்து அணி தன் பங்கிற்கு 348 ரன்களை விளாச தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 39 ரன்கள் பின்தங்கி ஆடிக்கொண்டிருக்கிறது.

rahane

இந்நிலையில் இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா வெளிநாடுகளில் அற்புதமாக பந்துவீசி பல சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வீரராக இருந்து வருகிறார்.

முன்னதாக இந்த நான்கு நாடுகளில் ஜாகிர்கான் 121 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் தலை சிறந்த பந்து வீச்சாளராக இருந்தார். தற்போது இஷாந்த் சர்மா முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்தததன் மூலம் இந்த சாதனையை முறியடித்து 122 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
இதன்மூலம் ஜாஹீர் கானின் சாதனையை இஷாந்த் சர்மா முறியடித்துள்ளார்.

Ishanth

இந்த பட்டியலில் 117 விக்கெடுகளுடன் கபில்தேவ் மூன்றாம் இடத்திலும், 89 விக்கெட்டுகள் உடன் ஸ்ரீநாத் நான்காம் இடத்திலும் 87 விக்கெட்டுக்ளுடன் முகமது சமி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -