ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் இணைய இருக்கும் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

Ind-1

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு பயிற்சிகளை செய்து வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மூன்று விதமான அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.

INDvsAUS

இந்த தொடர் வருகிற 27ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இது தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் இந்திய அணி இத்தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் அளிக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்தத் தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்க வேண்டிய சீனியர் வீரர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.

மேலும் ஐபிஎல் தொடரின்போது பாதியில் நாடு திரும்பிய இசாந்த் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தனது சிகிச்சைக்கான வேலைகளிலும், பயிற்சியிலும் தீவிரமாக இருந்தார். இந்நிலையில் தற்போது தொடர் கண்காணிப்பிற்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும் அவர் தற்போது இந்திய அணியில் இணைய தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.

Ishanth

மேலும் இஷாந்திற்கு ஏற்பட்ட காயம் சரியானால் உடனே அவர் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படுவார் என்று ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தற்போது இசாந்த் சர்மா ஆஸ்திரேலியா செல்ல தயார் என்றே தெரிகிறது.

- Advertisement -

மேலும் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி செய்த பௌலிங் வீடியோவும் தற்போது இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதனால் நிச்சயம் இஷாந்த் சர்மாவின் வருகையின் மூலம் இந்திய அணி மேலும் பலமடையும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் இருக்க இஷாந்தும் சேர்ந்தால் இந்திய அணி பவுலிங்கில் அசத்தும் என்பதில் சந்தேகமில்லை.