தோனியின் அறைக்கு அடிக்கடி செல்லும் வீரர் இவர்தான் – இஷாந்த் சர்மா பகிர்ந்த தகவல்

- Advertisement -

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் தோனி இதுவரை பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனியோ ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை மேலும் அவரது ரசிகர்கள் தோனி ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் கண்டுகளிக்க காத்து இருந்தனர்.

Dhoni

- Advertisement -

ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு காரணமாக அம்மாத இறுதியில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பூரண ஓய்வு நேரத்தில் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தோனி குறித்தும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தோனி உடனான தனது அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : துவக்கத்தில் கேப்டன் தோனி என்பதால் விலகியே இருந்ததாகவும் அதன் பின்னர் தோனியுடன் சகஜமாக பேச ஆரம்பித்ததால் அவருடன் நெருங்கி பழகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ishanth

அதன்படி இஷாந்த் கூறுகையில் : 2013 ஆம் ஆண்டு தான் தோனியுடன் நெருங்கி பழகி அவரது கனிவான குணத்தை புரிந்து கொண்டதாகவும் இஷாந்த் சர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் : துவக்கத்தில் தோனியுடன் குறைவாகவே பேசி வந்தேன். ஆனால் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு அவருடன் சகஜமாக பேசத் துவங்கினேன். மேலும் அவரைப் பற்றி நிறைய புரிந்து கொண்டேன்.

- Advertisement -

பின்னர் தோனி எவ்வாறு இளம் வீரர்களுடன் நடந்து கொள்கிறார் அவர் எவ்வளவு கனிவானவர் என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறி உள்ளார். இளம் வீரர்களுடன் நல்லவிதமாகப் பேசி அவர்களை நன்றாக தோனி வழிநடத்துவதில் சிறந்தவர். அதே நேரத்தில் களத்திலும் அவர் அதே போலவே நடந்து கொள்வார். அவர் தன் அறைக்கு யாரும் வரக்கூடாது என எப்போதுமே சொன்னது கிடையாது யார் வேண்டுமானாலும் தோனியின் அறைக்கு செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Shami-2

இது பற்றி நீங்கள் ஷமி இடம் கேட்டால் உங்களுக்கு நன்றாக தெரியும். ஏனெனில் தோனியின் அறைக்கு அடிக்கடி செல்லும் நபர் ஷமிதான். தோனி எப்போதுமே இப்படித்தான் அவருடன் இருக்கும் எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பது அவருக்கு பிடித்த விடயம் ஆகும். மேலும் அவருடன் பேசி மகிழ்வது வேறுமாதிரியான தருணம். அவரிடமிருந்து கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை குறித்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று இஷாந்த் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement