ஷு இல்லாம எப்படி விளையாடுவ. இஷாந்தை பார்த்து கேள்வி கேட்ட டிராவிட் – இஷாந்த் பகிர்ந்த முதல் ஒருநாள் போட்டி அனுபவம்

ishanth
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் ஓய்வில் இருக்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 13 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அந்த நிகழ்வினை குறித்து இஷாந்த் பேசியுள்ளார்.

- Advertisement -

அதன்படி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் மாயங்க் அகர்வாலுடன் நேரலையில் பேசிய இஷாந்த் முதன் முதலாக இந்திய அணிக்கு தேர்வான போது நடந்த சுவாரசியமான ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது : அயர்லாந்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் நான் தேர்வாகவில்லை. அதேபோன்று இங்கிலாந்தில் நடைபெற இருந்த ஒரு நாள் போட்டியிலும் நான் தேர்வாகவில்லை.

ஆனால் அதற்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வாகி இருந்தேன். அப்போது எனக்கு 17 வயது இருக்கும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாததால் நான் என்னுடைய அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனக்கு அயர்லாந்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நான் ஒருநாள் அணிக்கு தேர்வாகி இருக்கிறேன் என்று கூறினார்.

Ishanth-2

மேலும் அயர்லாந்தில் கடுமையான குளிர் இருப்பதால் தினேஷ் கார்த்திக், தோனி உள்ளிட்ட வீரர்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார். இதையடுத்து நான் அயர்லாந்துக்கு விமானம் மூலம் சென்று அடைந்தேன். அப்போது விமான நிலையத்தில் இருந்து இறங்கிய நான் என்னுடைய மேலாளரை தொடர்பு கொண்டு என்னுடைய லக்கேஜ் குறித்து கேட்டேன். அதற்கு மேலாளரும் லக்கேஜ் முழுவதும் ஹோட்டல் அறைக்கு வந்து விடும் நீங்கள் அங்கே செல்லலாம் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

பிறகு மற்ற பயணிகள் கொண்டு வந்த பெட்டிகளுடன் என்னுடைய லக்கேஜ் கலந்து விட்டதால் அது எனது அறைக்கு வரவில்லை. அப்பொழுது அனைவரும் மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் நான் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த டிராவிட் நீ பயிற்சியை செய்யவில்லையா ? என்று கேட்டார். நான் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் வாய் முணுமுணுத்துக் கொண்டு நின்றேன்.

Ishanth

பிறகு என்னை பார்த்து சிரித்த டிராவிட் என்ன ஆச்சு ? என்று விசாரித்தார். அப்போது நான் விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கூறினேன். அதன் பின்னர் அப்படியானால் நீ எவ்வாறு விளையாடுவாய் என்று கேட்டார். அணியின் சீனியர் வவீரரான அவரே என்னிடம் அப்படி கேட்டதால் உடனே நான் பயந்து போய் விட்டேன். ஆனால் இறுதியில் ஜாகிர்கான் காலடிகளை வாங்கி நான் எனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினேன் என்று இஷாந்த் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளையும், 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறவில்லை என்றாலும் டெஸ்ட் அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அவர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement