இந்திய அணியின் தேர்வில் ஏமாற்றம் அடைந்த சீனியர் வீரர். லக்கி சேன்ஸ் கிடைத்த இளம் வீரர் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று நாட்டிங்காம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே பும்ராவின் பந்துவீச்சில் துவக்க ஆட்டக்காரரை இழந்தது.

INDvsENG

- Advertisement -

அதன் பின்னர் தற்போது இங்கிலாந்து அணி சற்று நிதானமாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றன. அதன்படி தொடக்க வீரரான அகர்வாலுக்கு பதில் ராகுல் விளையாடுவதாக கோலி அறிவித்தார். சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக ஜடேஜா விளையாடுகிறார். இதில் மேலும் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் அனுபவ வீரரான இஷாந்த் சர்மா முதல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு இது பெரிதும் ஏமாற்றமாக அமைந்திருக்கும் அவருக்கு பதிலாக இளம் வீரரான முகமது சிராஜ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Thakur 1

அதேபோன்று நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூருக்கு விளையாட அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாகூருக்கு இம்முறை அவரது பேட்டிங் திறமை காரணமாகவே வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement