ஆமாண்டா நீ கருப்பன் தான். இனவெறியை தூண்டும் வகையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இந்திய வீரர் – வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளையாட் என்ற கருப்பின நபர் போலீசாரால் நடுரோட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த கொடுமையான தாக்குதல் சம்பவம் காரணமாக 140 நகரங்களில் போராட்டங்கள் கிளம்பின. மேலும் கருப்பின சமூகத்தை ஆதரித்து கடும் வன்முறையும் எழுந்தது. பல்வேறு விளையாட்டு துறையை சேர்ந்த பிரபல வீரர்களும் அவர்களை ஆதரித்து போராட்டத்தில் குதித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இதுபோன்ற இனவெறி மற்றும் நிறவெறி தாக்குதலை எதிர்த்து கிரிக்கெட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டேரன் சமி தனது கருத்தினை பகிரங்கமாக அறிவித்தார். அதில் ஐசிசி கிரிக்கெட்டிலும் இது போன்ற இனவாத தாக்குதலை கட்டுப்படுத்த வழி முறைகளை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தான் 2013-14 ஆம் ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது இதுபோன்ற இனவெறி தாக்குதலுக்கு உள்ளானேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் சன் ரைசர்ஸ் அணியின் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரை சிலர் “கலு” என்ற வார்த்தையைக் கொண்டு அழைத்ததாக கூறியுள்ளார். மேலும் அவ்வாறு அவர்கள் அழைக்கும் போது அது நல்ல திடம் வாய்ந்த கருப்பினத்தவர் என்று நினைத்து நான் சிரித்து விட்டு சென்றேன்.

Sammy 1

ஆனால் நாட்கள் செல்ல செல்ல தான் எனக்கு தெரிந்தது அதற்கு முழு அர்த்தம் “கருப்பன்” என்று இதனால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக சமி தெரிவித்துள்ளார். மேலும் நான் அந்த சீசனில் விளையாடியபோது கருப்பின மக்களை இழிவுபடுத்தும் வகையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்திய வீரர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் விரைவில் என்னை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர் மிகவும் கோபமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

யார் யார் என்னை அவ்வாறு அழைத்தார்கள் என்று எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது இன்னும் அவர்களை நான் சகோதரர் ஆகவே தான் பார்க்கிறேன் என்று தனது கோபத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் சமியை “கலு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ishanth

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் சன்ரைஸ் அணியை சேர்ந்த புவனேஸ்வர் குமார் மற்றும் ஸ்டெயின் ஆகியோர் இசாந்த் சர்மாவுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது அவரது இந்த பதிவிற்கு இஷாந்த் சர்மாவை விரைவில் விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement