அஷ்வின் ஆடுவதற்காக அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர் இவர்தானாம் – வெளியான தகவல்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

indvseng

இந்த போட்டியில் வெற்றி பெற்று அணி தொடரில் முன்னிலை பெறும் என்ற காரணத்தினால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே விராட் கோலி 4 வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் மட்டுமே அணியை தேர்வு செய்து வருகிறார். அதிலும் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அஷ்வின் இடம்பெறாதது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் 4வது டெஸ்ட் போட்டியில் அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அஷ்வின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இல்லாமல் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் ஆகவே அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியே அஷ்வின் அணியில் இணையும் பட்சத்தில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா வெளியேற்றப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ishanth 1

ஏனெனில் இஷாந்த் சர்மாவின் பணிச் சுமையை குறைக்கும் வகையிலும், அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்று கருதப்படுவதால் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் விளையாடும் என்று தெரிகிறது. அதன்படி இஷாந்த் சர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அஷ்வின் இணைவார் என்று தெரிகிறது.

Ashwin

அதே போன்று மற்றொரு வாய்ப்பாக ரவீந்திர ஜடேஜா கால் முட்டியில் காயமடைந்துள்ளதால் நான்காவது போட்டியில் அவரால் விளையாட முடியாத பட்சத்தில் நிச்சயம் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ இருப்பினும் நிச்சயம் அஷ்வினுக்கு நான்காவது போட்டியில் இடம் கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement