இதைவிட ஈஸியா விக்கெட் எடுக்க முடியாது. அசத்தலாக பந்துவீசிய இஷாந்த் – வைரலாகும் வீடியோ

Ishanth-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொமினுள் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி பந்துவீசி வருகிறது.

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். குறிப்பாக 6 ஆவது ஓவரிலேயே பங்களாதேஷ் அணியின் இம்ருல் கயிஸ் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். அதனை தொடர்ந்து இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று கேப்டன் கோலியால் பாராட்டப்பட்ட இஷாந்த் சர்மா சர்மாவின் பந்துவீச்சில் அனல் பறந்தது.

இவரது அபாரமான பந்துவீச்சில் ஷட்மென் இஸ்லாம் என்ற வீரரை பேட்டிங்கில் ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு சிறப்பான ஒரு பந்தை வீசி கீப்பர் கேட்ச் மூலம் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். இஷாந்த் சர்மாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement