36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் செய்த சாதனை – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை தோற்கடித்தது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Umesh 3

- Advertisement -

இந்த வெற்றி கேப்டன் கோலிக்கு தொடர்ச்சியான 7 ஆவது வெற்றியாகும் மேலும் கடந்த 4 போட்டிகளாக தொடர்ந்து இன்னிங்ஸ் வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிப்பு முக்கிய காரணமாக இருந்தாலும் பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தி அசத்தினர்.

வங்கதேச அணிக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சில் அசத்தினர். அதிலும் குறிப்பாக இஷாந்த் ஷர்மா உமேஷ் யாதவ் ஆகியோர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். முதல் இன்னிங்சில் இசாந்த் சர்மாவும், இரண்டாவது இன்னிங்சில்ஷமியும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Ishanth

இதன் மூலம் இந்திய மண்ணில் நடந்த டெஸ்டில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாக அமைந்தது. இதற்கு முன்னர் 37 ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 1982ஆம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் கபில் தேவ் மற்றும் மதன்லால் ஆகியோரின் மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement