இஷாந்த் சர்மாவோடு சேர்த்து இன்னொரு வீரரும் இந்த 4 ஆவது டெஸ்ட்ல விளையாடல – இதை கவனிசீங்களா ?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக இன்றைய 4-வது போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

indvseng

- Advertisement -

அதன்படி செப்டம்பர் 2 ஆம் தேதி இன்று ஓவல் மைதானத்தில் துவங்கியுள்ள இந்த நான்காவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசி வருகிறது. அதன்படி இந்திய அணியானது தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் 2 மாற்றங்கள் இருந்தன.

ஆனால் அனைவரும் எதிர்பார்த்த அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக ஷர்துல் தாகூரும், ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

shami

ஏனெனில் கடந்த போட்டியில் இசாந்த் சர்மா விக்கெட் வீழ்த்த வில்லை என்பதால் அவர் நீக்கப்படுவார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனால் நன்றாக வீசி கொண்டிருந்த ஷமி இந்த போட்டியில் விளையாடாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Umesh

ஆனால் டாசிற்கு பிறகு பேசிய கேப்டன் கோலி கூறுகையில் : இஷாந்த் மற்றும் ஷமி ஆகியோர் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருவதால் இந்த போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டனர் என்ற தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதேபோன்று கடந்த போட்டிக்கு பிறகு ஹாஸ்பிடல் சென்று ஸ்கேன் செய்த ஜடேஜா மீண்டும் அணியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement