ஆக்ரோஷமாக இருந்த விராட் கோலியை அமைதியாக்கியதே அவர்தான் – இஷாந்த் சர்மா பகிர்ந்த தகவல்

Ishant-and-Kohli
- Advertisement -

19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி உலக கோப்பையை பெற்று தந்த விராட் கோலி வெகுவிரைவாக இந்திய அணிக்காக அறிமுகமாகி நட்சத்திர வீரராக மாறியது மட்டுமின்றி கேப்டனாகவும் இந்திய அணியை மூன்று வடிவத்திலும் வழிநடத்தி இந்திய அணியின் சிறப்பான கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை அவரது தலைமையில் பெற்று தர முடியவில்லை என்றாலும் வெளிநாடுகளில் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி பெற்ற வெற்றிகளை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.

Virat Kohli 46

- Advertisement -

அந்த அளவிற்கு இந்திய அணியை மிகவும் ஆக்ரோஷமான அணியாக மாற்றி பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். களத்தில் எப்போதுமே சுறுசுறுப்புடனும், குறிப்பாக தனது ஆக்ரோஷமான பாணியிலும் வழி நடத்தும் விராட் கோலி பல்வேறு முறை எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் கோலியின் இந்த ஆக்ரோஷம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் சிறு வயதில் இருந்தே விராட் கோலியுடன் பயணித்த இஷாந்த் சர்மா தற்போது விராட் கோலி ஆக்ரோசத்தை குறைந்து கொண்டு அமைதியான ஒரு வீரராக வலம் வருகிறார் என்றும் விராட் கோலியின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு விடயங்களில் தானும் உறுதுணையாக இருந்திருக்கிறேன் என்று ஒரு பேட்டியை அளித்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் : விராட் கோலியின் டிக்ஷனரியில் நடக்கும் என்ற வார்த்தையே கிடையாது. அதை நடத்திக் காட்டுவோம் என்று தான் எங்களிடம் சொல்லுவார்.

Ishanth

சிறுவயதில் இருந்தே விராட் கோலி அப்படிதான். எப்போதும் முடியாது என்கிற வார்த்தை அவரிடம் இருந்ததே கிடையாது. எதையம் முடித்துக் காட்ட வேண்டும் என்ற தீர்க்கமான ஒரு முடிவு அவரிடம் இருக்கும். 17 வயதில் நாங்கள் இருவரும் டெல்லி அணிக்காக விளையாடியபோது அவரது தந்தை மறைந்து விட்டதாக எங்களுக்கு தெரியவந்தது. அப்போது அவர் சோகமாகவும் தனியாகவும் அமர்ந்திருந்தால் அந்த நேரத்தில் நான் அவருக்கு என்ன ஆறுதல் கூற வேண்டும் என்று தெரியவில்லை.

- Advertisement -

ஆனால் அந்த நிலையிலும் அவர் மைதானத்திற்குள் வந்து பேட்டிங் செய்து எங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் எப்படி அந்த விஷயத்தை செய்தார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை எனக்கு அதே போல் நிகழ்ந்திருந்தால் மைதானத்திற்கு நான் வந்திருக்க மாட்டேன். ஆனால் விராட் கோலி வேறு மாதிரியாக யோசிக்க கூடியவர் அதனால் தான் அவர் மிகச்சிறந்த கேப்டனாகவும் உருவெடுத்தார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் வீரர்களை மிகவும் பிட்டாக மாற்றியதற்கு முக்கிய காரணமாகவும் விராட் கோலி தன்னை முன்மாதிரியாக மாற்றிக் கொண்டார்.

இதையும் படிங்க : 2023 உ. கோ : மண்ணோடு மண்ணான மாபெரும் வெ.இ சரித்திரம், கத்துக்குட்டியை விட படுமோசம் – உலக ரசிகர்கள் சோகம், காரணம் இதோ

அவரது தலைமையின் கீழ் பவுலர்கள் மிகச் சிறப்பாக முன்னேறினார்கள். விராட் கோலியின் அனைத்து சூழலிலும் நான் அவரது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் ஆக்ரோஷமாக இருந்த அவர் தற்போது அமைதியை கொண்டு வந்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவி அனுஷ்கா சர்மா தான். ஏனெனில் இப்போது பலரும் ஆன்மீகம் பற்றி பேசி வருகிறோம். களத்தில் ஆக்ரோஷமாக இருந்த விராட் கோலி தற்போது கோயில்களுக்கும் செல்ல தொடங்கியுள்ளதற்கு காரணமே அவரது மனைவி அனுஷ்கா தான். அவர் விராட் கோலியின் வாழ்க்கையில் இணைந்ததிலிருந்து பல்வேறு மாற்றங்களை விராட் கோலி பின்பற்றி வருகிறார் என இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement