19 வயதில் இந்திய ஏ அணிக்கு கேப்டன் ஆன மும்பை வீரர்..! யார் தெரியுமா..?

kishan
- Advertisement -

முன்னாள் இந்திய யு19 கேப்டனான இஷான் கிஷான் தற்போது இந்திய போர்டு பிரசிடெண்ட் லெவன் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிரான 3 நாள் கொண்ட பயிற்சி போட்டி வரும் ஜூலை 30 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய ஏ அணி வீரர்களும் அறிவிக்கப்ட்டுள்ளனர்.
ishan
தற்போது இந்திய போர்டு பிரசிடெண்ட் லெவன் அணியின் கேப்டனான அறிவிக்கப்பட்டுள்ள இஷான் கிஷான், நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் விளையாடி வந்தார். 20 வயதே ஆனா இந்த இளம் வீரர் அந்த அணிக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் என்றே கூறலாம். தோனியின் சொந்த மண்ணான ஜார்கண்ட் மாநிலத்தை சேந்த இந்த இளம் வீரர் பேட்டிங்கீல் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் பீலேடிங் செய்யும் போது ஸ்டம்ப்ஸ் பின்னல் நின்று பல விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.

மும்பை அணியில் பேட்டிங் வரிசையில் 3 வது இடத்தில் இறங்கினாலும் கீப்பிங் என்று வந்து விட்டால் சற்றும் சோர்வடையாமல் தோனி போன்றே பாய்ந்து பாய்ந்து பீல்டிங் செய்து வந்தார். மேலும் கடந்த ஐபிஎல் போட்டியின் போது ராஜஸ்தானிற்கு எதிரான லீக் போட்டியிலும் அரைசதம் அடித்து விலாசினார். இதுவரை 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷான் 594 ரன்களையும் குவித்துள்ளார்.
kishan
தற்போது தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிரான 3 நாள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த தொடரில் பங்குபெறும் இந்திய போர்டு பிரசிடெண்ட் லெவன் அணி வீரர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*இஷான் கிஷான் (கேப்டன்)

*சஞ்சய், ஈஸ்வரன்

- Advertisement -

*துருவ் ஷோரி

*அன்மோல் ப்ரீத் சிங்

- Advertisement -

*ரிக்கி பு

*ஜலாஜ் சக்சேனா

- Advertisement -

*சித்தேஷ் லத்

*மிஹிர் ஹிர்வானி

- Advertisement -

*ஜடேஜா

*அவேஸ் கான்

*ஷிவம் மவி

*இஷான் பரேல்

*அதித் சேத்

Advertisement