தோனியின் கேப்டன் பதவியை பறித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் – டீம் லிஸ்ட் இதோ

ishan kishan
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2021ம் ஆண்டு முதலாவதாக சையது முஷ்டாக் அலி டி20 தொடர் ஜனவரி 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த டி20 தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

Tamilnadu

- Advertisement -

2021 ஐபிஎல் தொடருக்கு முன் இந்த டி20 தொடர் நடைபெறுவது, இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்குபெறும் மாநில அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்ற வீரர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வீரர்களான யுவராஜ் சிங்,சுரேஷ் ரெய்னா,அம்பத்தி ராயுடு மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளன.

இந்த தொடரில் உத்திர பிரதேஷ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும், கேரளா அணிக்காக ஸ்ரீசாந்தும், ஆந்திரப்பிரதேச அணிக்காக அம்பத்தி ராயுடு மற்றும் பஞ்சாப் அணி சார்பாக யுவராஜ் சிங்கும் விளையாடுகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் தோனியும் ஓய்வு பெற்று இருப்பதால், அவர் ஜார்கண்ட் இந்த சையது முஷ்டாக் அலி தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் உள்பட அனைவரும் கோரிக்கை வைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

Dhoni

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எம்எஸ் தோனி ஓய்வு அறிவித்தார். எம்எஸ் தோனியுடன் தனது ஓய்வை அறிவித்த சுரேஷ்ரெய்னா இந்த தொடரில் இடம் பெற்றுள்ளதால், எம்எஸ் தோனியும் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது தற்போது சையது முஷ்டாக் தொடரில் பங்குபெறும் ஜார்க்கண்ட் அணி தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அந்த பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்எஸ் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தோனியின் கேப்டன் பதவியின் இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரும், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவருமான இஷான் கிஷன் பிடித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கலக்கிய அவர் இந்த தொடரிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் அணி :

இஷான் கிஷன் (கேப்டன்), பங்கஜ் குமார், குமார் தியோபிரத், சவுரவ் திவாரி, உத்தகார்ஷ் சிங், ஆனந்த் சிங், விராட் சிங் (துணை கேப்டன்), விகாஷ் விஷால், அனுகுல் ராய், ஷாபாஸ் நதீம், சோனும்குமார் சிங், வருண் ஆரோன், ராகுல் சுக்லா குமார் சிங், விவேகானந்த் திவாரி, பாலா கிருஷ்ணா, ஆஷிஷ்குமார், சத்ய சேது.

Advertisement