இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தனது அறிமுக வாய்ப்பைப் பெற்ற இஷான் கிஷன் முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அறிமுகமான முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அவர் சாதனையையும் படைத்துள்ளார். 42 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மூன்றாவது வரிசையில் இறங்கி இவர் ஆடிய அதிரடி ஆட்டம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த போட்டியில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தது குறித்து போட்டி முடிந்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில் : நான் இந்த போட்டியில் களமிறங்கும் அதற்கு முன்பாகவே ஓய்வறையில் வீரர்கள் அனைவரிடமும் கூறி விட்டேன்.
அதாவது இந்த போட்டியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நான் முதல் பந்திலேயே நிச்சயம் சிக்ஸர் அடிப்பேன் என்று இந்திய அணியின் ஓய்வறையில் வீரர்களின் அனைவரிடமும் கூறினேன். அதேபோன்று பிரித்வி ஷா ஆட்டம் இழந்ததும் எனக்கான வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி உள்ளே சென்ற நான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தேன் என்று இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். அவர் முதல் பந்தில் சிக்சர் அடித்து அது மட்டுமின்றி இந்த போட்டியில் அரைசதம் அடித்து அனைவரையும் வியக்கவைத்தது. இதன் மூலம் அவருடைய தன்னம்பிக்கை இரட்டிப்பாக இருக்கும்.
மேலும் இங்கிலாந்து அணிக்கெதிராக ஏற்கனவே டி20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் அந்தப் போட்டியில் அரைசதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் இந்திய அணியின் முதன்மை அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சொதப்பும் பட்சத்தில் நிச்சயம் இஷான் கிசனுக்கு வாய்ப்பு தேடி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.