140-150 கி.மீ வேகத்தில் வந்த ஆர்ச்சரின் பந்துகளை அசால்ட்டா அடிச்சதுக்கு காரணம் இதுதான் – இஷான் கிஷன் வெளிப்படை

Ishan-5
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபாரமாக வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு துவக்க வீரராக அறிமுகமான இஷான் கிஷன் அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

Ishan

இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்களின் பந்துகளை சற்றும் பயமின்றி நாலாபுறமும் சிதறடித்தார். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை இவர் எளிதாக கையாண்டார். இந்நிலையில் ஆர்ச்சரின் அதிவேக பந்துவீச்சினை சிறப்பாக எதிர் கொண்டதற்கான காரணத்தை தற்போது இஷான் கிஷன் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் போட்டியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்துகளை தான் அதிகம் எதிர்கொண்டேன். இதுபோன்ற அதிவேக பந்துவீச்சுகளை நான் எளிதில் சமாளிப்பதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் நான் எடுத்த பயிற்சிதான் ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பொழுது அதிவேக பந்துகளை சந்தித்து பயிற்சி எடுத்தேன்.

ishan 2

மும்பை அணியின் வலைப்பயிற்சியில் பும்ரா, போல்ட், நாதன் குல்டர் நைல் போன்ற அதி வேகப் பந்து வீச்சாளர்கள் வேகத்திலும் ஸ்விங் செய்து வீசுவார்கள். அவர்களின் அதிவேக பந்துவீச்சை நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் நான் எதிர் கொண்டு உள்ளேன். அப்படி எடுத்த பேட்டிங் பயிற்சியே தற்போது இந்த போட்டியில் எனக்கு உதவியுள்ளது.

ishan 1

மேலும் இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது கோலி என்னிடம் அதிரடியாக விளையாடும்படி கூறினார். இதன் காரணமாக நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஷாலின் குறிப்பிடத்தக்கது.

Advertisement