அதுதான் டர்னிங் பாயின்ட்..! ஈடன் கார்டனை அதிரவைத்த இளம் வீரர்..! – ரோகித் சர்மா நெகிழ்ச்சி..!

sharma
- Advertisement -

கொல்கத்தா மற்றும் மும்பை அணி மோதிய 41 வது ஐ.பி.எல் போட்டி கொல்கத்தா ஹெடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இரு அணிகளின் 11 வது லீக் போட்டியான இதில் முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சூர்யகுமார் 36 ரன்களிலும் ஏவின் லெவிஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

mumbai

- Advertisement -

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் கூட்டணி அபாரமாக விளையாடி மும்பை அணியின் ரன்களை உயர்த்தினார்கள். இதில் இளம் வீரர் இஷான் கிஷான் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 62 ரன்களை விளாசினார், இதில் 6 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும் . பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 108 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

போட்டி முடிந்ததும் பேட்டியளித்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில் “இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த போட்டியில் அணைத்து வீரர்களுமே சிறப்பாக விளையாடினார்கள் , குறிப்பாக இஷான் கிஷானின் ஆட்டம் பிரமிக்க வைத்தது. இந்த போட்டியில் அடித்து ஆடுவது கடினமாக இருந்தத ஆனால் , இஷான் கிஷான் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்தார். எல்லா புகழும் அவருக்குத்தான் ” என்று கூறியிருந்தார்.

Mumbai1

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் முன்னேறி 4 வது இடத்தில உள்ளது மும்பை அணி. இன்னும் பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற 3 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், வரும் 3 போட்டிகளிலும் மும்பை வெற்றி பெற்றால் பிலே ஆப் சுற்றிற்கு மும்பை தகுதி பெரும் வாய்ப்பு இருக்கும்.

Advertisement