IND vs RSA : டி20 தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள இஷான் கிஷன் – எத்தனையாவது இடம் தெரியுமா?

ishan kishan 2
- Advertisement -

இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில் தலைநகர் டெல்லி மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா 12 வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை தடுத்து நிறுத்தி சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்து அதிர்ச்சி கொடுத்தது. அதனால் தலைகுனிவுக்கு உள்ளான இந்தியா இந்த தொடரை கைப்பற்ற வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் விசாகப்பட்டினத்தில் களமிறங்கிய 3-வது போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் அற்புதமாக செயல்பட்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நிம்மதி அடைந்தது.

IND vs RSA Harshal Patel

- Advertisement -

அதனால் 2 – 1* (5) என்ற நிலைமையில் உள்ள இந்த தொடரின் கோப்பையை வெல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ள இளம் வீரர் இஷான் கிசான் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றே கூறலாம்.

சுமார் ஐபிஎல்:
கடந்த வருடங்களில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சரவெடியாக பேட்டிங் செய்த இவர் அதன் காரணமாக இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று அறிமுகமான முதல் போட்டியிலேயே அரை சதமடித்து அசத்தினார். அதனாலேயே இவரை எப்படியாவது மீண்டும் வாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டிய மும்பை நிர்வாகம் இம்முறை 15.25 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு கடும் போட்டி போட்டு வாங்கியது. ஆனால் அதுவே அவருக்கு பெரிய பாரமாக மாறியது என்றுதான் கூறவேண்டும்.

MI vs RR Ishan Kishan

ஆம் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்க பட்டதால் ஒவ்வொரு போட்டியிலும் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதை பார்த்த அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது. அதனால் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டே தீரவேண்டும் என்ற தேவையற்ற செயற்கையான அழுத்தத்தை சந்தித்த அவர் முதல் போட்டியிலேயே 81* ரன்கள் குவித்து மிரட்டினார். ஆனால் அதன்பின் தேவையற்ற அழுத்தத்தால் பார்மை இழந்து பெரும்பாலான போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய அவர் மும்பையின் அடுத்தடுத்து தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமானார்.

- Advertisement -

இந்தியாவுக்கு மாஸ்:
அதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான அவர் மொத்தம் பங்கேற்ற 14 போட்டிகளில் 418 ரன்களை 32.15 என்ற சராசரியில் எடுத்தாலும் 120.11 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார். மொத்தத்தில் மும்பைக்காக 15.25 கோடி என்ற தொகைக்கு அவர் போதுமான அளவு விளையாடவில்லை என்றே கூறலாம். அதன் காரணமாக இந்த தொடரில் மிகப்பெரிய அழுத்தத்துடன் களமிறங்கிய அவர் டெல்லியில் நடந்த முதல் போட்டியிலேயே 76 (48) ரன்களை விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்முக்கு திரும்பினார்.

Ishan Kishan 79

அத்துடன் கட்டாக்கில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 34 (21) ரன்களை விளாசிய அவர் விசாகப்பட்டினத்தில் நடந்த வாழ்வா சாவா என்ற 3-வது போட்டியில் 54 (35) ரன்களை தெறிக்கவிட்டு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மொத்தத்தில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 164* ரன்களை அடித்துள்ள அவர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா மோதி வரும் இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அதைவிட அவரின் 156.69 என்ற ஸ்ட்ரைக் ரேட் அழுத்தத்தில் இருந்து விடுபட்டு பழைய ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

- Advertisement -

தரவரிசை வளர்ச்சி:
அத்துடன் இந்த தென் ஆப்பிரிக்கா தொடர் துவங்குவதற்கு முன்பாக ஐசிசி டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் 76-வது இடத்தில் இருந்த அவர் முதல் போட்டியில் 76 ரன்களை அடித்து நேரடியாக 26-வது இடத்திற்கு முன்னேறினார். அத்துடன் 2-வது போட்டியில் எடுத்த 34 ரன்களை வைத்து 21-வது இடத்திற்கு முன்னேறிய அவர் முக்கியமான 3-வது போட்டியில் 54 ரன்கள் எடுத்ததால் நேரடியாக தற்போது உலகின் நம்பர் 7 பேட்ஸ்மேனாக முன்னேறி டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாக இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ishan 1

மேலும் தரவரிசையில் 689 புள்ளிகளைப் பெற்றுள்ள அவர் இந்த இளம் வயதிலேயே நிறைய இந்திய நட்சத்திர வீரர்களின் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளை முந்தியுள்ளார். அந்த பட்டியல் இதோ:
இஷான் கிசான் : 689*
ஷிகர் தவான் : 680
சூர்யகுமார் யாதவ் : 600
எம்எஸ் தோனி : 563
ரிஷப் பண்ட் : 525
விரேந்தர் சேவாக் : 424

இதையும் படிங்க : அவங்க 2 பேரும் டீம் குள்ள வந்துட்டா ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் காலியாயிடும் – வாசிம் ஜாபர் எச்சரிக்கை

இப்படி ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக அசத்தலாக செயல்படத் துவங்கியுள்ள இஷான் கிசன் வரும் காலங்களில் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement