சீனியர் வீரர்களின் பாத்திரங்களை கழுவி, தண்ணீர் பிடித்து, சிறிய அறையில் தங்கி – இந்திய அணியில் இடம்பிடித்த இளம்வீரர்

Ishan-3

உள்ளூர் ஆட்டங்கள் மற்றும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ்க்காக கடந்த சில வருடங்களாக நன்றாக ஆடி வரும் கிஷன் கிஷன் முதல் முறையாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் , இரண்டாவது போட்டியில் இஷன் கிஷன் களமிறக்கப்பட்டார்.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு தனது இன்னிங்சை முடித்துக்கொண்டது. இந்நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்திய அணியின் ஓபனர் கே எல் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

ishan 1

இதன்பின் விராட் கோலியுடன் ஜோடி போட்டுக் கொண்டு ஆடிய தொடங்கிய 32 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார் .அதில் அவர் ஐந்து பவுண்டரிகளையும் 4 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் டி20 போட்டியில் அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் இஷன் கிஷன் தட்டிச்சென்றார். இந்நிலையில் இஷான் கிஷனின் தந்தை கிஷன் குறித்து சில விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

12 வயதில் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்கிற அணி இஷான் கிஷனை ஆட தேர்வு செய்தது. இந்நிலையில் அவர் 12 வயதில் அவரது ஊரான பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு தனியாக செல்ல வேண்டி இருந்தது. நானும் எனது மனைவியும் பயந்த நேரத்தில் சுற்றியிருந்தவர்கள் இவர் இந்த நேரத்தில் ராஞ்சிக்குச் சென்றால் தான் பின்நாளில் பெரிய கிரிக்கெட் வீரராக வலம் வருவார் என்று தைரியம் கொடுத்ததால் அவரை சிறிது பயத்துடனே வழி அனுப்பி வைத்தோம்.

ishan 1

அவர் சென்று இரண்டு ஆண்டுகள் 4 சீனியர் வீரர்கள் உடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். அவர்களின் வேலைகளை செய்வதும் தண்ணீர் பிடிப்பது, பாத்திரங்களை கழுவுவது என பல வேலைகளையும் செய்துள்ளார். மேலும் அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் உணவு உண்ணாமல் நொறுக்கு தீனிகளையும், ஜூஸை மட்டும் குடித்துக்கொண்டு உறங்கி விடுவார். இது எங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தெரிய வந்தது.

- Advertisement -

ishan 2

விஷயம் தெரிந்த பின்னர் தனியாக ஒரு வீடு பார்த்து அவரது தாயாரை நான் ராஞ்சிக்கு அனுப்பி வைத்தேன்.பின்னர் அவரது தாயாருடன் தங்கி அங்கிருந்து கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.
இவ்வளவு கஷ்டத்திற்கு பின்பு இன்று அவர் இந்திய அணிக்காக ஆடியது மிக சந்தோசமாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் இஷான் கிஷன் தந்தை கூறினார்.