- Advertisement -
இந்திய கிரிக்கெட்

210 ரன்னுல அவுட் ஆனதும் தான் நான் மிஸ் பண்ண அந்த விஷயம் எனக்கே தெரிஞ்சது – இஷான் கிஷன் பேட்டி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று டிசம்பர் 10-ஆம் தேதி சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரரான ஷிகார் தவான் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்த வேளையில் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை நாலா புறமும் சிதறடித்தனர்.

குறிப்பாக உச்சகட்ட அதிரடி ஆட்டத்தை விளையாடிய இஷான் கிஷன் அணியின் ஸ்கோரை மல மலவென உயர்த்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது ஜோடி 290 ரன்களை குவித்து அசத்தியது. இறுதிவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களை குவித்தது. குறிப்பாக இந்த போட்டியில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை இரட்டை சதமாக அடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் 131 பந்துகளை சந்தித்த அவர் 24 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 210 ரன்களை குவித்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர், இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என பல்வேறு சாதனைகளை அவர் இந்த போட்டியின் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அதேபோன்று அவருக்கு உறுதுணையாக நின்ற விராத் கோலியும் 91 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 113 ரன்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட் தனது 44-வது சதத்தை விளாசி ஆட்டம் இழந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் தான் அடித்த இரட்டை சதத்திற்கு பிறகு பேட்டியளித்த இஷான் கிஷன் கூறுகையில் : இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததை நான் முன்கூட்டியே கணித்து விட்டேன். அதனால் எனது திட்டம் மிகத் தெளிவாக இருந்தது. பந்து என்னுடைய ரேஞ்சில் இருந்தால் நிச்சயம் நான் அடித்து விளையாட போகிறேன் என்பதை முடிவு செய்துவிட்டேன்.

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்த ஜாம்பவான் வீரர்களின் பட்டியலில் என்னுடைய பெயரும் இணைந்ததை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு நான் ஆட்டம் இழந்தவுடன் தான் 15 ஓவர்கள் மீதம் இருப்பதை உணர்ந்தேன். கண்டிப்பாக என்னால் இந்த போட்டியில் 300 ரன்கள் அடித்திருக்க முடியும். ஆனால் 300 ரன்களை அடிக்க வாய்ப்பு இருந்தும் நான் ஆட்டம் இழந்து போதுதான் 15 ஓவர் மீதமிருந்தது எனக்கு தெரிந்தது.

இதையும் படிங்க : 12 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த வீரர் – அதுக்குன்னு இவ்ளோ பெரிய கேப்பா?

அதேபோன்று விராட் கோலியுடன் விளையாடியது மிகச் சிறப்பாக இருந்தது. நான் 90 ரன்களை கடந்திருந்த போது சிக்ஸர் அடித்து தான் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னை நிதானப்படுத்தி மிகச்சிறப்பாக விளையாட வைத்தார் என்று இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by