- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரட்டைசதம் அடித்த அன்று இரவு இஷான் கிஷனின் தந்தை என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? – இதை படிங்க

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது அண்மையில் வங்கதேச நாட்டில் நடைபெற்ற முடிந்தது. அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வங்கதேச அணியிடம் தோல்வியை சந்தித்து ஒருநாள் தொடரை இழந்த வேளையில் இரண்டாவது போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூன்றாவது போட்டிக்கான அணியிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக மாற்று துவக்க வீரராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் மாற்று துவக்க வீரராக இஷான் கிஷன் இடம் பிடித்தார்.

அப்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அவர் அந்த போட்டியில் 210 ரன்கள் குவித்து இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இஷான் கிஷன் இரட்டைசதம் அடித்த அன்று இரவு அவரது தந்தை என்ன அறிவுரைகளை வழங்கினார் என்பது குறித்த சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் எப்பொழுதுமே இஷான் கிஷன் தந்தையான பிரணவ் குமார் பாண்டே அவரிடம் அதிகமாக பேச மாட்டாராம். பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தபோது கூட அவரைப் பற்றி அவர் பெரிதாக பேசவில்லையாம். ஏனெனில் நான் எப்போதும் உன்னிடம் நிறைய பேச மாட்டேன் மற்றவர்களிடம் இருந்து உனக்கு பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே எனக்கு வேண்டும் என்றே அவரது தந்தை கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி பிரணவ் குமார் பாண்டே பேசியதில் :

இரட்டை சதம் அடித்த அன்று இரவு இஷான் கிஷன் என்னிடம் தொலைபேசியில் அழைத்து தான் இரட்டை சதம் அடித்ததாக தெரிவித்தார். அப்பொழுது நான் அவரிடம் சொன்னது ஒரு விடயம்தான் : அடுத்த போட்டியில் நீ மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தான் துவங்க வேண்டும் எனவே அதற்கான பயிற்சியை மேற்கொள். இந்த இரட்டை சதத்தை உன்னுடைய தலையில் ஏற்றிக்க கூடாது என்று தான் கூறியதாக பிரணவ் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி டி20 உலக கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாததால் வருத்தத்தில் இருந்த அவரை தேற்றி அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. அதற்காக உன்னை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யும் அளவிற்கு நீ உன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவருக்கு அறிவுரை கூறியதாக அவர் சில கருத்துக்களை பதிந்துள்ளார்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட் வரலாற்றில் டாப் 5 ஸ்கோரை பதிவு செய்த அணிகளின் பரிதாப பட்டியல்

அதோடு ரஞ்சிக் கோப்பை தொடருக்காக பங்களாதேஷ் நாட்டில் இருந்து கொல்கத்தா வந்த அவர் அங்கிருந்து மீண்டும் ராஞ்சி வந்து அங்கு ஜார்கண்ட் அணியுடன் இணைந்ததாகவும் அவரது தந்தை மகிழ்ச்சியாக பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by