இதை மட்டும் விட்டுட்டா நாளைய போட்டியிலும் தோல்விதான் பரிசாக கிடைக்கும் – பயத்தில் நியூசி வீரர்

- Advertisement -

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் 204 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி சர்வசாதாரணமாக 19 ஓவர்களில் அடித்து நொறுக்கியது. இந்த போட்டியில் ராகுல், கோலி ஐயர் என சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Iyer-3

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி கூறும்போது : அன்று 200 ரன்கள் எடுத்தும் ஆனால் பவுலிங்கில் ஆக்ரோஷம் போதவில்லை. மேலும் ஆக்ரோஷத்தை கூட்டினால் நல்லது. ரன்கள் கொடுப்பது கேட்சிகளை நழுவு விடுதல் கூடாது. அப்படி நழுவவிட்டால் ஆட்டம் எப்படி போகிறது என்பதை நம்மால் கணிக்க முடியாது.

முதல் போட்டியில் கேப்டன் வில்லியம்சனிடம் நிறைய விவாதித்து இரண்டு மூன்று ஓவர்கள் வீசினேன். ஆனால் அதிலிருந்து ஒரு விடயத்தை கற்றுக் கொண்டுள்ளோம். நாளைய போட்டியில் முதலிலிருந்தே ஆக்ரோஷமாக வீச வேண்டும். குறிப்பாக கோலி, ராகுல், ரோகித் மற்றும் ஐயர் என
அனைவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்துவது என்பது கடினம்தான்.

Rahul

எனவே விக்கெட்டுகளை கைப்பற்றினால் மட்டுமே நாளைய டி20 போட்டியில் வெற்றி சாத்தியம் நாளைய போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடவேண்டும். 200 ரன்களை தடுத்து வெற்றி பெற முடியாமல் போகக்கூடாது. மற்ற மைதானங்களை விட இந்த மைதானத்தில் விளக்கொளி கீழே இருக்கும். எனவே இதில் கேட்ச் பிடிப்பது கடினம்.

Eden-park

எந்த ஒரு கேட்சையும் விட்டுவிட்டால் நாளைய போட்டியில் தோல்வியே மிஞ்சும் விளக்கொளியில் நாம் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் இந்திய அணியை கட்டுக்குள் வைக்க ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement