விராட் கோலியை ஏமாற்றிய பந்து. க்ளீன் போல்டாகி வெளியேற்றம் – வைரல் வீடியோ

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தற்போது ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

kohli 2

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து செய்தது அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து முடித்தது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக அறிமுக ஜோடி ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விளையாடியது. அகர்வால் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிலையிலும், ப்ரித்வி ஷா 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கோலி அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐயர் 103 ரன்களையும், ராகுல் 64 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரி என 88 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்களை குவித்தது. இதனையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து.

இந்த போட்டியில் வழக்கமான தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சதத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அரைசதம் கடந்த கோலி 51 ரன்கள் எடுத்து இஷ் சோதி பந்தில் போல்டாகி வெளியேறினார். சமீபமாக சுழற்பந்தினை எதிர்த்து விளையாட சிரமப்பட்டு வரும் கோலி இன்றும் கூக்லியை கணிக்க தவறி போல்டானார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement