பாண்டியா ஆப்ரேஷன் பண்ணி ஆஸ்பிட்டல்ல படுத்துனு இருக்கும்போது கூட அடங்க மாட்டீங்களா – பங்கமாக கலாய்த்த பிரபல நடிகை

Isa

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார்.

Pandya-1

எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் தீர்வினை காண அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள லண்டன் செல்ல இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது பாண்டியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று அறுவை சிகிச்சை முடிந்து தான் நலமாக இருப்பதாக தற்போது பதிவிட்டுள்ளார். பாண்டியாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Pandya

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியாவின் இந்த பதிவை கண்ட பாலிவுட் நடிகை இஷா பெல்லா நீங்கள் கடிகாரத்தை கட்டிக்கொண்டுதான் அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களா என்று நகைச்சுவையாக கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த பாண்டியா ஹாஹா எப்பொழுதும் என்று பதிலளித்துள்ளார். இஷா பெல்லா இதன்மூலம் தெரிவித்தது யாரெனில் ஹாஸ்பிடலில் ஆபரேஷன் செய்து கூட உங்களுக்கு இதெல்லாம் தேவையா ஓய்வெடுங்கள் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.