மரியாதை குறைவாக பேசிய ரஷீத்கான்.! கோவத்தில் ரசிகர்கள்..!

கிரிக்கெட் உலகில் கடைக்குட்டி அணியாக வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியுடம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்து. இந்த தொடரின் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணியை வாஸ் அவுட் செய்து அனுப்பியது. இந்த தொடரில் ஐபிஎல் போட்டியின் மூலம் பிரபலமான ரசீத் கான் சிறப்பாக விளையாடினார்.

harsha-bhogle

இம்மாதம் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தான் அணியின் ஆதிக்கம் இருந்து வந்தது.
இந்த தொடரின் 3 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ,வங்கதேச அணியை வீழ்த்தி அபாரா வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரின் 3 வது போட்டியிலும் வங்கதேச அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த போதும் ரஷீத் வீசிய ஓவரில் தோல்வியடைந்தது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய ரசீத் கான் 3 போட்டிகளில் 8 விக்கெடுகளை வீழ்த்தி அசத்தினார். இவரது சிறப்பான ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் கூறிவந்த நிலையில், கிரிக்கெட் வர்ணனையில் முன்னணியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஷா போக்லே, ரஷீத் கானைப் பாராட்டி ட்விட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ரஷீத் கான், ‘தேங்க் யூ புரோ’ என்று பதிலளித்துள்ளார். அதன் பின்னர் தான் ரஷீத்திற்கு ஏழரை கிளம்பியது, 19 வயதாகும் ரஷீத் கான் எப்படி 56 வயதாகும் ஹர்ஷா போக்லே ‘புரோ’ என்று கூப்பிடலாம் என்று விவாதத்தை ஆரம்பித்தனர்.

rashid-bhogle

உங்கள் வயதை போலவே தான் உங்கள் மூளையும் உள்ளது என்றும், உங்களுக்கு 20 வயது நெருங்கவில்லையா,உங்களுக்கு என்ன 30 வயது தாண்டியா ஆகிறது என்று பலரும் அவரை வருத்தெடுத்து வருகின்றனர். புரோ என்று சொன்னதற்காக இத்தனை நபர்கள் தன்னிடம் மல்லுக்கட்டுகிறார்கள் என்று ரஷீத் கான் நினைத்தாரோ என்னமோ, அதன் பின்னர் அந்த உரையாடளின் பக்கமே இன்னும் தலைகாமிக்காமல் இருக்கிறார். பாவம் சின்ன புள்ள தெரியாம சொல்லிடுச்சி, விட்ருங்கப்பா.

- Advertisement -