தோனி சூப்பர் தான். ஆனா இந்த கேப்டன் கிட்ட நைட் 2 மணிக்கு கூட டவுட் கேக்கலாம் – பதான் கூறிய அந்த கேப்டன் யாரு தெரியுமா ?

Irfan-pathan

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பல ஆண்டுகளாக சிறப்பான மற்றும் கட்டுக்கோப்பான ஆட்டத்தின் மூலம் நேர்த்தியாக பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்ததில் ராகுல் டிராவிடின் பங்கு அதிகம் என்றால் அது உண்மையே. அந்த அளவிற்கு தலைசிறந்த வீரரான டிராவிட்க்கு கிடைக்க வேண்டிய சரியான அங்கீகாரம் மற்றும் மரியாதையும் கிடைக்கவில்லை மேலும் அவர் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட போதும் அவருக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கம்பீர் சமீபத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

Dravid

ராகுல் டிராவிட்டுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் பேட்ஸ்மேனாக எவ்வாறு கிடைக்கவில்லையே அதே போலதான் கேப்டனாகவும் அவர் குறைத்து மதிப்பிடப்பட்டார். டிராவிடின் தலைமையில் 25 டெஸ்ட் மற்றும் 79 ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியுள்ளது. அவர் சிறந்த கேப்டன் தான் ஆனால் அவரது கேப்டன்சியில் இந்திய அணி நீண்ட தூரம் பயணிக்கவில்லை என்பதால் அது வெளியில் தெரியாமல் போனது என்றும் பல வீரர்கள் அழுத்தமாக கூறி வருகின்றனர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தற்போது இந்திய ஏ அணியை சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார். பல சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்து வருகிறார். தற்போதும் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது டிராவிட் குறித்து சில நெகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ராகுல் டிராவிட் கேப்டன்சியில் அதிகமாக சிந்தனை உள்ளவர். அவர் 100% சிறந்த கேப்டன் தான் அணி வீரர்களிடம் இருந்து என்ன தேவையோ அது பற்றித் தெளிவாக அவருக்கு தெரியும். ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு கேப்டனுக்கும் வித்தியாசமான முறை இருக்கும். அந்த வகையில் சற்று வித்தியாசமாக சிந்திக்க கூடிய கேப்டன் ராகுல் டிராவிட்.

- Advertisement -

அணி வீரர்கள் இடையே அவரது கம்யூனிகேஷன் எப்பொழுதும் தெளிவாக இருக்கும். மேலும் ஒவ்வொரு வீரருக்கும் அவர்களுக்கு உண்டான ரோல் எது என்பதை தெளிவாகக் கூறி அதற்கு ஏற்றார்போல் தயாராகும்படி போட்டிக்கு முன்னர் கூறி விடுவார். மேலும் ஒரே அணியாக அனைத்து வீரர்களும் செயல்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம். மேலும் அணிக்காக எதையும் செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக சுயநலமின்றி விளையாடியவர் டிராவிட்.

Dravid 1

அணிக்கு தேவை என்றால் விக்கெட் கீப்பிங் செய்வார், துவக்க வீரராக களம் இறங்குவார், பின் வரிசையிலும் ஆடுவார். இதுபோன்ற ஒரு வீரரை நாம் பெற்றது சிறப்பான விடயம் மேலும் அவர் கேப்டனாக இருந்தபோது 2:00 மணிக்கு அவரை அழைத்து சந்தேகம் கேட்டாலும் தீர்த்து வைப்பார். அந்த அளவிற்கு டிராவிட் சிறப்பான ஒரு மனிதர் என்று இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.