2007 ல தோனி கேப்டன் ஆன புதிதில் என்ன செய்தார் தெரியுமா ? – இர்பான் பதான் ஓபன் டாக்

irfan

மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்கு 2004 ஆண்டு அறிமுகமாகி 2007ம் ஆண்டு கேப்டன் பதவியை பெற்றார். தனக்கு கேப்டன் பதவி கிடைத்தவுடன் இந்திய அணி விளையாடிய முதல் டி20 உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அப்போது தோனி செந்நிறம் படர்ந்தது போன்ற ஹேர் ஸ்டைல், ஆடுகளத்தில் அலட்டிக்கொள்ளாத ஆட்டிட்யூட் என பலவற்றை வைத்திருந்தார்.

Dhoni

ஆனால், கேப்டனான உடன் அவை எல்லாம் மாறியது. இதை இதனை ரசிகர்களே கண் கூட பார்த்தனர். இந்நிலையில் அவருடன் விளையாடிய இர்பான் பதான் இது குறித்து பேசியுள்ளார்.
2007ம் ஆண்டு கேப்டன் ஆனதிலிருந்து 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை வெல்லும் வரை அவரது கேப்டன்ஷிப் எப்படி இருந்தது என மாற்றமடைந்தது என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்..

தோனி 2007ஆம் ஆண்டு கேப்டன் பதவி பெற்ற போது மிகவும் உற்சாகம் அடைந்தார். அந்த உற்சாகத்தில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்றார். தொடர்ந்து டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது கள செயல்பாடுகள் அந்த சமயத்தில் மிகவும் பாராட்டப்பட்டது.

pathan

எப்போதும் தோனியின் அணி ஆலோசனை கூட்டம் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஐந்து நிமிடம்தான் வீரர்களிடம் பேசுவார். மற்றதெல்லாம் களத்தில்தான் நடக்கும் .2007 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பிங் திசையிலிருந்து எப்போதும் பந்துவீச்சாளர் இடம் ஓடிவந்து எப்படி பேசவேண்டும் என்று டிப்ஸ் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

- Advertisement -

ஆனால் 2013ஆம் ஆண்டு அவை எல்லாம் மாறியது பந்துவீச்சாளர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்த அனுமதித்தார், மேலும், துவக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை நம்பிய தோனி 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து கோப்பையை கைப்பற்றினார். அந்த அளவிற்கு அவர் தன்னை மாற்றிக்கொண்டே இருந்தார் என்று புகழ்ந்து பேசியுள்ளார் இர்பான் பதான்..

pathan 1

தோனியின் தலைமையில் இந்திய அணி அனைத்து ஐ.சி.சி தொடர்களையும் கைப்பற்றியது. அதுமட்டுமின்றி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்துக்கு வந்தது. அதுமட்டுமின்று ஐ.பி.எல் தொடரிலும் இவரது தலைமையிலான சென்னை அணி 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.