நீங்க இன்னும் மாறல. சம்பவம் செய்த இர்பான் பதான் பாராட்டிய ரசிகர்கள் – விவரம் இதோ

Irfan-1
- Advertisement -

சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு கிரிக்கெட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா லெஜன்ட்ஸ் அணியும் இலங்கையில் லெஜன்ட்ஸ் அணியும் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது .

yuvi

- Advertisement -

அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே திணறியது. முதலில் ஆடிய சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த யுவராஜ் சிங்கும் பெரிதாக சோபிக்கவில்லை.

பின்னர் வந்த முகமது கைஃப் நன்றாக ஆடி 46 ரன்கள் எடுத்தார். இருந்தாலும் இப்படியே சென்றால் தோற்றுவிடும் நிலைதான் இருந்தது. அதன் பின்னர் வந்த ஆல்ரவுண்டர் இர்பான் பதான் சரவெடியாக விளாசினார். மொத்தம் 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து 8 பந்துகள் மீதமிருக்கின்ற நிலையில் அணியை வெற்றிபெற வைத்தார் .

Irfan

இந்த ஆட்டத்தில் மொத்தம் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அடங்கும். இதனால் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். காலங்கள் கடந்தாலும் அவர்களது கிரிக்கெட் ஆட்டம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என புகழ்ந்து வருகின்றனர்

- Advertisement -

மேலும் பந்துவீச்சில் கலக்கிய பதான் சிறப்பாக செயல்பட்டார். ஒட்டு மொத்தத்தில் நேற்றைய போட்டியில் மீண்டும் பழைய பதானை கண்டதாக ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

irfan 2

இர்பான் பதான் பொதுவாகவே ஸ்விங் பந்துகளை வீசுவதில் வல்லவர். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இது சாத்தியமா என்று எதிர்பார்த்தவர்களுக்கு மத்தியில் நேற்று தனது அபாரமான ஸ்விங் பந்துவீச்சின் மூலம் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement