கோலியை அவுட் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள் கஷ்டப்பட இதுவே காரணம் – இர்பான் பதான் கருத்து

- Advertisement -

சமகாலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர் விராட் கோலி. கிட்டத்தட்ட அனைத்து விதமான போட்டிகளிலும் தேவைக்கு ஏற்ப ஆடி அதிரடியாக ரன் குவிப்பில் வல்லவர். டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று விதமான போட்டியிலும் 50க்கும் மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே ஒரு வீரர் இவர்தான். கிரிக்கெட் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு வீரரை கிரிக்கெட் உலகம் தற்போது வரை பார்த்திருக்காது.

kohli 2

- Advertisement -

எந்த ஒரு பந்து வீச்சாளரையும் நேர்த்தியாகவும் எளிதாகவும் ஆடுவதில் வல்லவர். இந்நிலையில் இப்படிப்பட்ட விராட் கோலியின் நேர்த்தியான ஆட்டத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான். அவர் கூறுகையில்…

விராட் கோலி எப்போதும் சிங்கிள் எடுப்பதில் மிகத் தெளிவாக இருப்பார். ஒரு ரன் அடித்துவிட்டு பந்துவீச்சை முனைக்கு வந்துவிடுவார். இவ்வாறு அடுத்தடுத்து தன்னை மாற்றிக்கொண்டே இருப்பார். இதனால் அவருக்கு எதிராக பந்து வீசுவது பந்துவீச்சாளர்களுக்கு சற்று கடினமான விஷயமாக இருக்கிறது.

Kohli 3

அவர் சிங்கிள் ரன் எடுப்பது மட்டுமல்லாமல் அவரது ரெஸ்ட் வொர்க் மிக அருமையாக இருக்கும்.
அதனால் தான் எப்படிப்பட்ட பந்தையும் மிக எளிதாக தான் தேர்ந்தெடுக்கும் திசையில் அடித்து விடுவார் என்று தெரிவித்துள்ளார் இர்பான் பதான். ஏற்கனவே முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீரும் இதே விஷயத்தை கூறி இதுதான் அவரது பலம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Kohli 1

ஏற்கனவே, 70 சதங்களும் 22,000 ரன்களும் சர்வதேச அளவில் விராட் கோலி கொடுத்துவிட்டு இன்னும் பல சாதனைக்காக பசியுடன் காத்திருக்கிறார் கோலி. உலகளவில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழும் கோலி எந்தவொரு அணிக்கு எதிராகவும், அந்த நாட்டிலேயே சிறப்பாக ஆடக்கூடிய திறமை படைத்தவர் ஆவார்.

Advertisement