பாண்டியாவின் இடத்திற்கு அந்த ஆப்கானிஸ்தான் வீரரை வாங்கலாம் – குஜராத் அணிக்கு ஐடியா குடுத்த இர்பான் பதான்

Irfan-and-Hardik
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்த பேச்சுக்கள் தற்போதே அதிகளவில் எழ ஆரம்பித்து விட்டன. ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்காக ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் மற்றும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் என அனைத்து பட்டியலையும் வெளியிட்டு விட்டனர்.

அதற்கு முன்னதாக டிரேடிங் மூலமாகவும் சில வீரர்கள் அணி மாற்றம் செய்து கொண்டனர். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் மூலம் அவர்களது அணியில் இணைத்துள்ளது.

- Advertisement -

கேப்டன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர் என அனைத்து துறைகளிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் ஹார்டிக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து வெளியேறியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பதே உண்மை. இவ்வேளையில் அவருக்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஹார்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 23 வயதான ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்சாயை கொண்டு வரலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஒரு யோசனை கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் :

- Advertisement -

குஜராத் அணி ஹார்டிக் பாண்டியாவை இழந்தது மிகப்பெரிய சரிவு தான். இருப்பினும் அவரது இடத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அஸ்மத்துல்லா ஓமர்சாய் சரியான வீரராக இருப்பார் என்று நான் பார்க்கிறேன். ஏனெனில் ஏற்கனவே குஜராத் அணியில் ரஷீத் கான் இருப்பதால் சக நாட்டு வீரரிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை அவரால் கேட்டு பெற முடியும். அதேபோன்று குஜராத் அணிக்கு நல்ல வேகப்பந்து வீச்சாளரும் தேவை.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ அணியில் இருக்க வேண்டிய அவரை.. ஏன் கழற்றி விட்டீங்க.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

அவர்களிடம் தற்போது தேவையான பணமும் இருப்பதால் நல்ல வீரர்களை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். அவர் கூறியது போன்றே அஸ்மதுல்லா ஓமர்சாய் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 உலகக் கோப்பை போட்டியில் பந்துவீச்சில் 9 விக்கெட்டை கைப்பற்றியதோடு மட்டுமின்றி பேட்டங்கிலும் 350 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement