- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2027 வேர்ல்டுகப்ல கண்டிப்பா ரோஹித் மற்றும் விராட் ஆடனும்.. இதுதான் காரணம் – இர்பான் பதான் விளக்கம்

அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் 202- ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்திய அணியானது கோப்பையை கைப்பற்றியயாக வேண்டிய முனைப்புடன் தற்போது தங்களது அணியை பலப்படுத்தி வருகிறது. ஏனெனில் 2023 உலக கோப்பை தொடரில் இறுதிவரை சென்று தோல்வியை சந்தித்த இந்திய அணி இம்முறை வெற்றி வாகை சூட வேண்டும் என்று முனைப்புடன் தயாராகி வருகிறது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடனும் : இர்பான் பதான்

இந்த 2027 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுமான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் தற்போது கிட்டத்தட்ட 40 வயதை அவர்கள் இருவரும் நெருங்கிவிட்டதாலும் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதாலும் அவர்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்களா? என்ற கேள்வி இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனாலும் அவர்கள் இருவருக்கும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவின் மிகப்பெரிய பலமே ஷார்ட் பிட்ச் பந்துகளை மிக எளிதாக எதிர்கொள்வதுதான்.

தென்னாப்பிரிக்கா போன்ற மைதானத்தில் அதிக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இருக்கும். எனவே ஷார்ட் பிட்ச் பந்துகள் வந்தால் ரோஹித் சர்மா நிச்சயம் அதனை அடித்து விளையாடுவார். அதேபோன்று மற்றொரு வீரரான விராத் கோலி மிடில் ஆர்டரில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை மூன்றாவது இடத்தில் அவரை தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடியிருக்க முடியாது என்பதை அவரது புள்ளி விவரங்களே சுட்டிக்காட்டுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின், விராட் கோலியை எல்லாம் தாண்டி வைபவ் சூர்யவன்ஷி சாதிப்பார்.. காரணத்தை கூறிய – டேல் ஸ்டெயின்

துவக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும் விராட் கோலி போன்ற ஒரு வீரர் இருந்தால் இன்னிங்ஸ் கட்டமைப்பு மிகச் சிறப்பாக அமையும். நீண்ட ஒரு இன்னிங்ஸ் விளையாடுவதற்கும், சேசிங்கின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கும் விராட் கோலிக்கு அலாதி பிரியம் எனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -