தோனி மட்டுமல்ல இவங்க எல்லோரையும் வச்சு ஃபேர்வெல் மேட்ச் நடத்துங்க – பதான் யோசனைக்கு குவியும் ஆதரவு

pathan 1

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவது மட்டுமின்றி அவருக்கான வழி அனுப்பும் போட்டியான ஃபேர்வெல் மேட்சை நடத்த வேண்டும் என்று பலரும் சொல்லி வருகின்றனர்.

Raina

மேலும் பி.சி.சி.ஐ-யும் தோனிக்கு முறையான வழி அனுப்பும் போட்டி நடத்த ஆயத்தமாகி உள்ளது. ஆனால் அதற்கு தோனி சம்மதிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. மேலும் தோனி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் அண்மையில் ஓய்வு பெற்ற அனைத்து இந்திய கிரிகெட் வீரர்கள் போட்டியை நடத்த வேண்டும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் அமோக ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ஓய்வு முடிவை அறிவித்த வீரர்களுக்கு வழி அனுப்பும் போட்டி நடைபெறவில்லை. எனவே அவர்களை வைத்து ஃபேர்வெல் நடத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த முடிவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் ரசிகர்கள் என பல தரப்பிலும் ஆதரவு குவிந்து வருகிறது. மேலும் இந்த போட்டியை நடத்துவதன் மூலம் கிடைக்கும் தொகையை வேறு ஒரு நல்ல விடயத்திற்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.

- Advertisement -

Raina

மேலும் இந்த ஐடியா சிறப்பாக உள்ளதால் பலரும் அதுக்கு ஓகே சொல்லி வருகின்றனர். அவர் கூறிய அணியில் இடம்பெற்றுள்ள ஓய்வு பெற்ற வீரர்களின் பெயர்களாவது : 1) கம்பீர், 2) சேவாக், 3) டிராவிட், 4) லட்சுமனண், 5) யுவராஜ், 6)தோனி, 7) பதான், 8) அகர்கர், 9) ஜாஹீர் கான், 10) ஓஜா 11) ரெய்னா ஆகியோர் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.