- Advertisement -
இந்திய கிரிக்கெட்

திலக் வர்மா சூப்பர் 8 சுற்றில் இந்த விடயத்தை மாற்றியே ஆகனும்.. இல்லனா கஷ்டம் தான் – இர்பான் பதான் கருத்து

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

திலக் வர்மாவின் ஆட்டம் குறித்து பேசிய : இர்பான் பதான்

கடைசியாக நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் திலக் வர்மாவின் ஆட்டம் கவலைக்குரிய விடயமாக மாறியது. ஏனெனில் 27 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடித்தாலும் வெறும் 31 ரன்களை 114 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மட்டுமே அடித்திருந்தார்.

- Advertisement -

இப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் 114 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியது தான் தற்போது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடினால் தான் அணியின் ரன் குவிப்பு அதிகமாகும் என்கிற நிலையில் டாப் ஆர்டரில் இவர் மெதுவாக விளையாடியது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் :

திலக் வர்மாவின் பேட்டிங் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இலங்கை மைதானங்களில் நீங்கள் பொறுமையாக விளையாடினால் அதில் அர்த்தம் உண்டு. அதேவேளையில் பேட்டிங்கிற்கு சாதகமான அகமதாபாத் மைதானத்தில் அவர் இப்படி 114 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியது தவறு. எனவே சூப்பர் 8 சுற்று போட்டிகளின் போது நிச்சயம் அவர் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி தான் கீ பவுலர்.. அடுத்து நடக்கப்போவதை பாக்க காத்திருக்கிறேன் – சுனில் கவாஸ்கர் கருத்து

இல்லையெனில் இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு தான் அது பாதகமாக அமையும். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்கள் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தி விளையாடினால் தான் மிடில் ஓவர்களில் நிலையான ஆட்டத்தையும், பின்னர் இறுதி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடியும். எனவே திலக் வர்மா தனது ஸ்ட்ரைக் ரேட் விடயத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -