இந்த ஒரு புறக்கணிப்பு தான் ரோஹித்தை இன்று உலகின் மிகச்சிறந்த அதிரடி வீரராக மாற்றியுள்ளது – பதான் பகிர்ந்த ரகசியம்

Pathan-1

இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா தற்போதைய நவீன கிரிக்கெட்டில் சிறப்பான வீரராக திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என ஆதிக்கம் செலுத்தி வந்த ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் அணியிலும் தனது ஆதிக்கத்தை மெல்ல மெல்ல துவங்கியிருக்கிறார்.

Rohith

தற்போதைய கிரிக்கெட் உலகின் அதிரடி பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் ரோஹித் சர்மாவிற்கு ஆரம்ப கால கிரிக்கெட் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ரோகித் சர்மா பின் வரியிலேயே களம் இறங்கி விளையாடி வந்தார். 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரோகித் சர்மா பின்வரிசையில் தொடர்ச்சியான சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார்.

அதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவதும், தேர்வாவதும் என நிரந்தரம் இன்றி அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு தோனி ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கி விளையாட வைத்தார். அதன் பின்னர் அவரது கெரியரே தலைகீழாக மாறியது. இன்றுவரை துவக்க வீரராக பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

இதற்கிடையே 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னரே ரோகித் சர்மா தலை சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசிய இர்பான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் ரோகித் சர்மாவின் எழுச்சி குறித்து பேசியதாவது :

- Advertisement -

ரோகித் சர்மா மிகவும் ரிலாக்சாக ஆடுவதைக் கண்டு பலர் ஆரம்ப காலத்தில் அவரை கடுமையாக உழைக்க வேண்டும் என்றெல்லாம் கருத்து கூறினர். வாசிம் ஜாபர் விஷயத்திலும் நடந்தது அதுதான் அவர் மிகவும் நிதானமாக ஓடுவார் பரபரப்பாக இருக்க மாட்டார். ரிலாக்ஸ் ஆக இருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

அதேபோன்றுதான் ரோஹித்தும் ரிலாக்சாக இருப்பதால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. ஆனால் ரோஹித் மிகவும் கடினமான உழைப்பாளி எப்போதும் கிரிக்கெட் பற்றியே யோசித்து கொண்டிருக்கும் அவர் புதிய புதிய முயற்சிகளை செய்து கொண்டே இருப்பார். அதனால் மட்டுமே அவரால் நான்கு முறை மும்பை அணிக்கு ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுக்க முடிந்தது.

Rohith

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட அவருடைய அந்த தருணம் தான் அவருக்குள் இருந்த தீயை பற்ற வைத்தது. மேலும் அதன் பின்னர் அந்த ஒதுக்கப்பட்ட நிகழ்வை நினைத்து விளையாடத் தொடங்கிய ரோஹித் வெகுண்டெழுந்து தற்போது உலகின் தலை சிறந்த வீரராக நிற்கிறார் என்று பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.