
இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் கொடுக்கும் அதிரடியான துவக்கம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருவதால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் இருந்திருந்தார். பின்னர் ஆசிய கோப்பை தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய டி20 அணியிலும் இடம் பிடித்திருந்த அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 163 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியுள்ளார்.
டி20 போட்டிகளில் இவரது தொடர்ச்சியான அதிரடி ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இவ்வேளையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறயிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தனது அதிரடியான ஆக்ரோஷமான ஆட்டத்தில் இருந்து சற்று முறைப்படுத்திக் கொண்டு சரியான பந்துகளை தேர்வு செய்து அதிரடியாக விளையாட வேண்டும் என்றும் முதல் பந்தில் இருந்தே அபிஷேக் ஷர்மா அடித்து விளையாடக்கூடாது என முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இனிவரும் போட்டிகளில் முதல் பந்தில் இருந்தே அபிஷேக் ஷர்மா இறங்கி வந்து விளையாடக்கூடாது. ஏனெனில் இப்படி நீங்கள் முதல் பந்தில் இருந்தே அடிக்க ஆரம்பிக்கும்போது பந்துவீச்சாளர்கள் இனி உங்களுக்கு எதிராக அதிக திட்டங்களை வகுக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் அதிகப்படியாக வேரியேஷங்களுடன் பந்து வீசியபோது அபிஷேக் சர்மா சற்று தடுமாறினார்.
பவர் பிளேவிலேயே ஆதிக்கம் செலுத்தி விளையாடும் அவரை பவர் பிளேவிற்குள் ஆட்டம் இழக்க வைக்க அனைத்து பவுலர்களும் யோசிப்பார்கள். எனவே இதுகுறித்து அபிஷேக் ஷர்மா இனி கூடுதலாக கவனிக்க வேண்டும். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் அதிரடியாக விளையாடி வரும் வேளையில் உங்களுக்கு எதிராக பந்துவீச்சாளர்களின் திட்டமும் அதிகரிக்கும்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணில் ஜோடியாக அசத்தல் சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா – விவரம் இதோ
எனவே டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக முழுவதுமாக அதிரடியாக விளையாடுவதை கட்டுப்படுத்திக் கொண்டு பந்துகளுக்கு ஏற்றவாறு விளையாடி தேவைப்படும் நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளில் அதிரடியாக விளையாடினால் அது சரியாக இருக்கும் என்று இர்பான் பதான் அவருக்கு அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.