120 ஸ்ட்ரைக் ரேட்டில் தடவுனா எப்படி.. மோசமான கேப்டன்ஷிப்.. பாண்டியாவின் 2 தவறை விளாசிய இர்பான் பதான்

Irfan Pathan 2
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் மும்பையை 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, ஐடன் மார்க்ரம் 42*, ஹென்றிச் க்ளாஸென் 80* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 277/3 ரன்கள் எடுத்தது.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற சாதனையையும் ஹைதராபாத் படைத்தது. பின்னர் 278 ரன்களை துரத்திய மும்பை முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக திலக் வர்மா 64, டிம் டேவிட் 42* ரன்கள் எடுத்தும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதால் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

மோசமான கேப்டன்ஷிப்:
முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் இந்த வருடம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே சுமாராக கேப்டன்ஷிப் செய்து தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கிய போது முதன்மை பவுலரான பும்ராவுக்கு முதல் 11 ஓவரில் பாண்டியா வெறும் 1 ஓவர் மட்டுமே கொடுத்தார். அதை பயன்படுத்தி ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கான அடித்தளத்தை அமைத்தனர். அதே போல பேட்டிங்கில் கடைசி நேரத்தில் வந்து அடித்து நொறுக்க வேண்டிய அவர் 24 (20) ரன்களை 120 என்ற தடவலான ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அந்த வகையில் மும்பையின் தோல்விக்கு காரணமான ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் மோசமாக இருப்பதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் மிகவும் சாதாரணமானது என்று சொல்லலாம். எதிரணி அடித்து நொறுக்கும் போது பும்ராவை அதிக நேரம் அவர் ஒதுக்கி வைத்தது என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது”

இதையும் படிங்க: என்னால முடியல ரோஹித் பாய்.. ப்ளீஸ் நீங்களே பாத்துக்கோங்க.. ரோஹித்தின் உதவியை நாடிய – ஹார்டிக் பாண்டியா (எதற்கு தெரியுமா?)

“மும்பை அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் போது கேப்டன் மட்டும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் வெற்றி காண முடியாது” என்று கூறியுள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மாவுக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற பாண்டியா தலைமையில் முதல் 2 போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது மும்பை ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Advertisement