பேட்டை தூக்கி வீசிட்டு இனி விளையாடவே மாட்டேன்னு தோனி போயிருக்காரு – இர்பான் பதான் பகிர்ந்த சுவாரசிய தகவல்

irfan
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி குறித்து நாள்தோறும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் தோனி உடனான அனுபவம் குறித்தும் பல வீரர்கள் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் அல்லாது கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் தோனியை குறிவைத்து ஒரு கேள்வியை எழுப்பி அதனை சமூக வலைத்தளத்தில் முன்வைத்து வருகின்றனர்.

dhonipathan

- Advertisement -

அந்த வகையில் தோனி குறித்த அனுபவங்களை முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வரும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தோனியின் நண்பர்களில் ஒருவரான இர்பான் பதான் தோனியுடனான அனுபவம் குறித்து ரசிகர்களின் வேண்டுகோளுக்காக ஒரு சுவாரசியமான விடயத்தை பகிர்ந்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட இர்பான் பதான் எப்போதும் எல்லோருக்கும் தோனி கூலாக இருப்பதை மட்டுமே தெரியும் என்பதால் அவரது கோபமான தருணம் குறித்து ஒரு முக்கிய தருணத்தை இர்பான் பதான் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது : அந்த சம்பவம் 2006 2007 ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது நாங்கள் அணியினர் முழுவதும் ஒரு பயிற்சியை மேற்கொண்டு இருந்தோம்.

அந்த பயிற்சியில் எங்களுக்குள்ளேயே 2 அணிகளை பிரித்து வலதுகை பேட்ஸ்மேன்கள் இடதுகையிலும், இடதுகை பேட்ஸ்மென்கள் வலது கையிலும் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். அதன்படி இரு அணிகளும் விளையாடிக்கொண்டே போது இடது கையால் பேட்டிங் செய்ய வந்தார் தோனி.

pathan 1

ஆனால் அவர் இடது கையால் பேட்டிங் செய்த போது எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இதனால் கடுப்பான தோனி தனது பேட்டை தூக்கி வீசிவிட்டு இனி பேட்டிங் செய்யவே மாட்டேன் என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு சென்றுவிட்டார். பின்னர் நீண்ட நேரத்துக்குப் பிறகு பயிற்சிக்கு திரும்பியவர் சிறிது நேரம் கோபமாகவே காணப்பட்டார் என்றும் தோனியுடனான குறித்து பகிர்ந்து கொண்டார் இர்பான் பதான்.

Advertisement