- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்த 3 பேரும் சதமடிப்பார்கள் – இர்பான் பதான் கருத்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி வடோதரா நகரில் நடைபெறவுள்ள வேளையில் தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த 3 பேரும் கண்டிப்பாக சதம் அடிப்பார்கள் : இர்பான் பதான் கணிப்பு

இதன் காரணமாக இந்த முதல் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் கைப்பற்றும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- Advertisement -

இந்த நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேவேளையில் இந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான ஒருநாள் தொடரை யார் கைப்பற்றுவார்கள்? இந்த தொடரில் எந்த வீரர்கள் அதிக ரன்களை குவிப்பார்கள்? என்பது குறித்த பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் எதிர்வரும் இந்த நியூசிலாந்து தொடர் குறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி சார்பாக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கில் ஆகிய மூவரும் சதம் அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்குஎதிரான ஒருநாள் தொடர்களின் போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தியிருந்தனர்.

இதையும் படிங்க : இந்திய அணியை வீழ்த்தி டி20 உலககோப்பையை கைப்பற்றப்போகும் அணி இதுதான் – கிரீம் ஸ்மித் கருத்து

அதே வேளையில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்ட சுப்மன் கில் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முயற்சிப்பார். அந்த வகையில் பார்க்கையில் அவரும் இந்த தொடரில் சதம் அடிக்க வாய்ப்புள்ளதாக இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -