இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஐ.சி.சி பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகியதை தொடர்ந்து எந்த அணி இறுதிப் போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
திலக் வர்மாவுக்கு சரியான மாற்று வீரர் இவர்தான் : இர்பான் பதான்
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவின் தலைமையில் 15 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட வீரர்களில் ஒருவராக இடதுகை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மாவும் இடம்பிடித்திருந்தார்.
ஆனால் தற்போது அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாடிய அவர் அடிவயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக இந்த நியூசிலாந்து தொடர் மட்டுமின்றி டி20 உலககோப்பை தொடரிலும் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர் டி20 உலககோப்பையில் விளையாட முடியவில்லை என்றால் மாற்று வீரரை தேர்வுசெய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.
இந்நிலையில் ஒருவேளை திலக் வர்மாவால் உலககோப்பை தொடரில் விளையாட முடியவில்லை என்றால் ஷ்ரேயாஸ் ஐயர் தான் அவருக்கு மாற்றுவீரராக சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே தற்போது இந்திய அணி காயத்தால் அவதிப்படும் வீரர்களை கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த குறைகளை இந்திய அணி எவ்வாறு களையப்போகிறது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
இதையும் படிங்க : இன்னும் 34 ரன்கள் மட்டுமே தேவை.. ஷிகார் தவான் மற்றும் விராட் கோலியை முந்த காத்திருக்கும் – ஷ்ரேயாஸ் ஐயர்
ஒருவேளை திலக் வர்மா இல்லாத பட்சத்தில் அவருக்கு பதிலாக சரியான மாற்றுவீராக ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரிடம் நல்ல அனுபவமும், தலைமை பண்பும் இருக்கிறது. அதன் காரணமாக அவரை தான் நான் அணியில் தேர்வு செய்வேன். ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் போன்ற வீரர்கள் இருந்தாலும் அவர்கள் துவக்க வீரர்கள் தான். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை பொருத்தவரை அவர் ஒரு பக்கா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என இர்ஃபான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



