சச்சினின் 100 சதம் என்கிற சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்க முடியும் – இர்பான் பதான் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா ?

Irfan-pathan

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த வீரர் என்பது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளை குவித்து வைத்திருக்கிறார். மொத்தமாக 200 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Sachin 1

இந்நிலையில் அவரது இந்த சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்த சாதனையை முறியடிக்க போகும் அந்த நபர் யாரென்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் இர்பான் பதானிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்து அந்த இர்பான் பதான் நிகழ்ச்சியில் பேசியபோது : விராட் கோலி நிச்சயம் இந்த 100 சதம் என்ற சாதனையை முறியடிக்க முடியும்.

நிச்சயம் கோலி இந்த சாதனையை குறித்து யோசித்திருப்பார். ஆனால் அது குறித்து வெளியே பேசமாட்டார். இருப்பினும் சச்சினின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியும் என்று கேட்டால் நான் நிச்சயம் கோலியை சொல்வேன். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சச்சின் 100வது சதத்தை அடிக்கும்போது அந்த பயணத்தில் அவருடன் நானும் இருந்தேன் என்பது ஒரு பெருமையான விடயம்.

Kohli

மேலும் அந்த சாதனையை இன்னொரு இந்தியர்தான் முறியடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். விராட் கோலி தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 70 சதங்களை விளாசியுள்ளார். இதில் ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 27 சதம் அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Kohli-2

2008 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இவர் இதுவரை 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11867 ரன்களை அடித்துள்ளார். மேலும் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7240 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.