இவரைப்போன்ற போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இருந்தால் இந்திய அணியை வீழ்த்தவே முடியாது – பதான் பதிவிட்ட வில்லங்கமான பதிவு

Irfan-pathan
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் உத்வேகத்தினால் தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் கடந்த 8ஆம் தேதி சவுதாம்ப்டன் நகரில் துவங்கியது.

Stokes

- Advertisement -

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி இழக்க வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது அண்மையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது.

மேலும் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் திகழ்ந்தார். பேட்டிங், பவுலிங் என மெர்சல் காட்டி அனைத்து வகையிலும் இங்கிலாந்து அணியை மீட்டெடுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்பி உள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அவரது இந்த ஆட்டம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : பென் ஸ்டோக்ஸ் மாதிரியான மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால் உலகில் எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்திய அணியால் மற்ற அணிகளால் வீழ்த்த முடியாத அணியாக திகழும் என்று ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவரது இந்த கருத்தை ஆதரித்து சிலரும் விமர்சித்து சிலரும் கருத்துகளை எழுப்பி வருகின்றனர்.

jadeja 2

ஏனெனில் இந்திய அணியில் ஹர்டிக் பண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் அதை கொஞ்சம் கூட நினைவில் கொள்ளாமல் தான் இது போன்ற கருத்தினை பதிவிட்டது தவறு என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement