இந்திய அணிக்காக இவரை உருவாக்கி வளர்த்தவர் கங்குலி தான். அவர் மேட்ச் வின்னராக கங்குலியே காரணம் – பதான் ஓபன் டாக்

pathan 1
- Advertisement -

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் சௌரவ் கங்குலி. மேட்ச் பிக்சிங் செய்து பெரும் சிக்கலில் இந்திய அணி மாட்டிக் கொண்டு இருந்தது அப்போது 26 வயது இளம் வீரராக அணியை தன் கையில் எடுத்தார் கங்குலி அதன் பின்னர் ஆக்ரோஷமாக வழிநடத்தி எப்படி வெளிநாடுகளில் எதிரணிகளை வீழ்த்த வேண்டும், எப்படி ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்றெல்லாம் இந்திய அணிக்கு கற்றுக் கொடுத்தார் .

Ganguly 2

- Advertisement -

இவர் காலகட்டத்தில்தான் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக அறிமுகமாகி பல சாதனைகளைப் படைத்தார்கள். தற்போது இருக்கும் யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி, ஹர்பஜன் சிங், முகமது கைஃப், விரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர், ஜாகிர் கான், ஆசிஸ் நெஹரா என பல நட்சத்திர வீரர்கள் இவரது தலைமையில்தான் அறிமுகமானார்கள்.

இவர்கள் அனைவருக்குமே தனது அதிகபட்ச ஆதரவைக் கொடுத்து காப்பாற்றி வைத்தார் கங்குலி. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் இர்பான் பதான். அவர் கூறுகையில்..
கங்குலி இளம் வீரர்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பார். அவர் அணியில் தான் பெரும்பாலும் இளம் வீரர்களை இடம் பிடிப்பார்கள்.

yuvraj

துவக்கத்தில் பல இளம் வீரர்கள் சரியாக ஆடவில்லை அப்போதெல்லாம் கங்குலி தான் அவர்களுக்கு பெரும்பான்மையான ஆதரவு கொடுகபார். அணியில் தக்க வைத்தார். அப்படித்தான் யுவராஜ் சிங் தொடக்க காலகட்டத்தில் கடுமையாகச் சொதப்பினார். யுவராஜ் சிங் சரியாக ஆடாத போதெல்லாம் கங்குலிதான் அவரை காப்பாற்றி வைத்தார்.

Ganguly

அதன்பின்னர் யுவ்ராஜ் சிங் கடந்து வந்த பாதை மற்றும் அவர் இப்போது இருக்கும் இந்த நிலைமைக்கும், அவரது புகழுக்கும் காரணம் கங்குலி தான் அந்த அளவிற்கு யுவ்ராஜ் சிங்கை ஆதரித்து வளர்த்தவர் கங்குலி தான் என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.

Advertisement