கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் பிரபல வீரர்களும், முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் சமூக வலைதளம் மூலமாக தங்களது கருத்தினையும், கிரிக்கெட் குறித்த அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பந்துவீச்சாளர் க்ரீம் ஸ்வான் ஆகியோர் இந்திய அணி வீரர்கள் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த பேட்டியில் இர்பான் பதான் கூறியதாவது :
கங்குலியை போலவே விராட் கோலி சிறந்த கேப்டனாக செயல்படுகிறார். இளம் வீரர்களுக்கு மிகச்சிறப்பான ஆதரவைத் தரும் விராட் கோலிக்கு அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் உள்ளது. அவர் தானாக முன்வந்து இளைஞர்களை ஆதரிக்கிறார். ரிஷப் பண்ட் விடயத்தில் இதனை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

எத்தனையோ போட்டிகளில் அவர் தடுமாறிய போதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து அவரை ஊக்குவித்து வருகிறார் என்று பதான் குறிப்பிட்டுள்ளார். குறித்து தொடர்ந்து பேசிய கிரேம் ஸ்வான் கூறுகையில் : பண்ட் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் பதான் சொல்வது சரிதான் அவர் ஒரு இளம் வீரர் அவருக்கு நிறைய ஆதரவு கிடைக்க வேண்டும்.

ஏனெனில் இங்கிலாந்தில் நடைபெற்ற அறிமுக போட்டியில் தான் சந்தித்த முதல் இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து அமர்க்களமாக கேரியரை தொடங்கியவர். அவர் அவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விசேஷமான ஒரு வீரராக இருப்பார் என்று நான் அப்போது நினைத்தேன், அவரிடம் தனித்துவம் இருக்கிறது என்று ஸ்வான் பேசியது குறிப்பிடத்தக்கது.



