இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது ஜூலை 13ஆம் தேதி துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை அணியில் சில நபர்களுக்கு கொரோனா உறுதியானதன் காரணமாக இந்த போட்டி அட்டவணை சற்று மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி ஜூலை 18 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது 29ஆம் தேதி முடிவடையும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொடரில் ஷிகார் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளதால் இந்த புதிய அணி எப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடும் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதனால் இந்த தொடர் எப்போது துவங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், நிபுணர்கள் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் இந்த இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள பிளேயிங் லெவன் இதோ :
1) ஷிகர் தவான், 2) ப்ரித்வி ஷா, 3) சூரியகுமார் யாதவ், 4) சஞ்சு சாம்சன், 5) மனிஷ் பாண்டே, 6) நிதீஷ் ராணா, 7) ஹார்டிக் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) தீபக் சாகர், 10) குல்தீப் யாதவ், 11) சாஹல்