நான் மட்டுமல்ல என்னைப்போன்ற பல வீரர்களை காப்பாற்றிய கேப்டன் இவர்தான் – பதான் ஓபன் டாக்

Pathan-3

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான். கடந்த 2003 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலியின் தலைமையில் இந்திய அறிமுகமானார். கடந்த வருடம் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். தனது கிரிக்கெட் கேரியரை சிறப்பாக ஆரம்பித்தாலும் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை சீக்கிரமே முடிவடைந்தது குறித்து அவரும் ஏற்கனவே தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Pathan

இளம் வயதிலேயே மிகவும் திறமையுடன் இந்திய அணிக்காக அறிமுகமான இவரால் நீண்ட காலம் இவரால் இந்திய அணிக்காக ஆட முடியவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் யார் என்று இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் சரியான பதில் ஒன்றை அளித்தார். அவர் கூறுகையில்…

கங்குலி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் இளம் வீரர்கள் அதிகம் இருந்தனர். இளம் வீரர்கள் எப்போதும் அணியில் சரியான கலவையில் இடம் பிடிப்பார்கள். அவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்து உள்ளது. அப்போது அணியில் சீனியர் வீரர்களுக்கு சமமான அளவில் இளம்வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.

Ganguly 1

குறிப்பாக இளம் வீரர்கள் ஆரம்பகட்டத்தில் சரியாக விளையாட சிரமப்பட்டாலும் அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து ஆதரிக்கும் மனம் கொண்டவர் கங்குலி. அப்படித்தான் யுவராஜ் சிங்கிற்கு பல வாய்ப்புகள் கொடுத்தார். அவரும் இந்தியாவிற்காக மேட்ச் வின்னராக உருவெடுத்து பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

- Advertisement -

Ganguly 2

இது போன்று பல இளம் வீரர்களை ஆதரித்தார் கங்குலி. அவர்களெல்லாம் பின்னாளில் நட்சத்திர வீரர்களாக உருவாகினார்கள். இதனால்தான் கங்குலியை சிறந்த கேப்டன் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி, சேவாக். ஹர்பஜன் சிங். கௌதம் கம்பீர் போன்ற பல வீரர்களும் சவுரவ் கங்குலியின் தலைமையில் தலைமையில்தான் இளம் வீரர்களாக அறிமுகம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.